ரெயில் சேவை, இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்த மும்பை கனமழை

Must read

மும்பை

மீண்டும் மும்பையில்கனாழை பெய்ததால் ரெயில் சேவை உள்ளிட்ட இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.

சற்றே தாமதமாகத் தொடங்கினாலும் கடந்த ஜூலை மாதம் முதல் வாரம் பெய்த கடுமையான பருவமழையால் மும்பை நகரம் அடியோடு முடங்கியது.  அப்போது ரன்வே உள்ளே மழைநீர் புகுந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. பல இடங்களில் சாலைப் போக்குவரத்து அடியோடு நின்று போனது. ரெயில் சேவைகளும் பாதிப்பு அடைந்ததால் பல அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அப்போது விடுமுறை அளித்தன. அதன் பிறகுச் சற்று மழை குறைந்தது.

தற்போது கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் மீண்டும் கனம்ழைதொடங்கியது. இந்த மழி குறித்த எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதையொட்டி அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட  தூர ரெயில்கள் நிறுத்தப்பட்டன. மின்சாரம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத் துண்டிக்கப்பட்டது. நகர ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால் நகரமே முடங்கிப் போனது

மலாட் குரார் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அருகிலிருந்த குடிசைகளில் வசித்தோரில் 21 பேர் உயிரிழந்தனர். 85 பேர் காயமடைந்துள்ளனர். இதைப் போல் பல இடங்களில் சுவர் இடிந்து விழுந்ததில் பலர் மரணம் அடைந்துள்ளனர். தானே  மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஓட்டல் பணியாளர்கள் இருவர மரணம் அடைந்துள்ளனர். இதுவரை மழையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பல ரெயில் நிலையங்களுக்குள் மழை நீர் புகுந்ததால்  ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ஏராளமான பயணிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அத்துடன் கனமழையால் கடல் சீற்றம் உண்டாகும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டதை அடுத்து வானிலை மையம் மக்களைக் கடற்கரை பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

More articles

Latest article