பூமியை படம் பிடித்து அனுப்பிய சந்திராயன் 2: இஸ்ரோ அறிவிப்பு

Must read

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், முதன் முறையாக பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 2 விண்கலம் – பாகுபலி என அழைக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. நிலவை நோக்கிய தனது பயணத்தில் சந்திரயான் 2 விண்கலம் 4வது சுற்று வட்டப்பாதையை நேற்று மாலை சரியாக 3.27 மணிக்கு,  4வது சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • இந்நிலையில், சந்திராயன் 2 விண்கலம் முதல்முறையாக பூமியை படம்பிடித்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தில் உள்ள L14 கேமரா மூலம் நேற்று மாலை பூமி படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

More articles

Latest article