சென்னை:
சென்னை சென்ட்ரலில் ரிசர்வேசன் கவுண்டர்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் ரொக்கபணம் செலுத்தியோ/ கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இதையடுத்து, 200 ரயில்களுக்கான அட்டவணையை இந்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அதில், தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை.

அறிவிக்கப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும் என்பதால், நேற்று காலை இணையதளம் மூலம் முன்பதிவு தொடங்கியது. ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 25 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் அளித்துள்ளது.

இதையடுத்து டிக்கெட் விற்பனையை நேரடியாக நடத்துவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரயில் அமைச்சகம் கூறி வந்தது. இந்த சூழலில் ரயில் டிக்கெட் விற்பனை கவுண்ட்டர்களை இன்று முதல் திறந்து நேரடி விற்பனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அவர், இணையதளா வசதி இல்லாத பொதுமக்களின் சிக்கலை தீர்க்க, நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் பொது சேவை மையங்களில் இன்று முதல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் பணி தொடங்க உள்ளதாக குறிப்பிட்டார்.