டெல்லி: ரயில் பயணிகள், தங்கள் பயணத்தின்போது, தங்களுக்கு தேவையான உணவை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்யலாம் என ஐஆர்சிடிசி அறிவித்து உள்ளது.

இந்தியன் ரயில்வே மூலம் இயக்கப்படும் ரயில் பயணிகளுக்கு தேவையான உணவுகளை  பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ( ஐஆர்சிடிசி)  வழங்கி வருகிறது.  இந்த நிறுவனம் தற்போது, பயணிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் உணவு விநியோக சேவையை தொடங்கியுள்ளது. ஆர்டர் செய்யும் போது பயணிகள் தங்கள் பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி, ரயில் இருக்கையில் இருந்தே உணவை ஆர்டர் செய்யலாம் என தெரிவித்து உள்ளது.

பயணிகள் தங்களது மொபைலில்,  ஐஆர்சிடிசியின் உணவு விநியோக சேவை செயலியான  ஜூப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ஆர்டர் செய்யலாம்.  சமீபத்தில்தான் ஐஆர்சிடிச,  ஜியோ ஹாப்டிக் உடன் இணைந்து பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்   சேவை மூலம் உணவை ஆர்டர் செய்ய அனுமதித்தது.

இந்த நிலையில், வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரயிலில் உணவை ஆர்டர் செய்யலாம் என ஐஆர்சிடி அறிவித்து உள்ளது.

அதன்படி, பயணிகள் தங்களது மொபைலில் பதிவேற்றப்பட்டுள்ள  ஜூப் சாட்போட் செயலியை திறந்து, அதில், தங்களது டிக்கெட்டின் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை பதிவிட்டு, உங்களுக்கு தேவையான  உணவை ஆர்டர் செய்யவும், எந்த ரயில் நிலையத்தில் உங்களுக்கு தேவை என்பதையும் தேர்ந்தெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி, உணவை ஆர்டர் செய்து, பரிவர்த்தனையை முடித்த பிறகு, சாட்போட்டிலிருந்தே உங்கள் உணவைக் கண்காணிக்க முடியும், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையத்தை ரயில் அடைந்தவுடன் ஜூப் உங்கள் உணவை டெலிவரி செய்யும் என்றும் தெரிவித்து உள்ளது.

.