டெல்லி

நாடெங்கும் இன்று முதல் ரயில் கட்டண உயர்வு அமலாகிறது.

குறைந்த செலவில் அதிக தூரம் பயணம் செய்யலாம் என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் முதன்மை தேர்வாக ரயில் போக்குவரத்து உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ரயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியானது.

அதாவது ஏசி அல்லாத ரயில்களுக்கும், விரைவு ரயில்களுக்கும் கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், ஏசி வசதி கொண்ட விரைவு ரயில்களுக்கு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்தப்பட இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டதால், ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது/|.

கட்டண உயர்வு விவரம் பின் வருமாறு :

எந்தெந்த ரயில்களுக்கு எவ்வளவு கட்டணம் உயர்கிறது?

புறநகர் ரயில்கள், சீசன் டிக்கெட்டுகள் – கட்டண உயர்வு இல்லை

Non AC (ஏசி அல்லாத ரயில்)
2ஆம் வகுப்பு

500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை
501 – 1500 கி.மீ. வரை – ரூ.5 உயர்வு
1500 – 2500 கி.மீ. வரை – ரூ.10 உயர்வு
2501 – 3000 கி.மீ. வரை – ரூ.15 உயர்வு

ஸ்லீப்பர், சாதாரண முதல் வகுப்பு பெட்டிகளில் (1கி.மீ-க்கு) – அரை பைசா உயர்வு

மெயில் மற்றும் விரைவு ரயில்கள்:

NON AC

ஸ்லீப்பர், முதல், 2ஆம் வகுப்புகளில் (1கி.மீ-க்கு) – 1 பைசா உயர்வு

AC Coach (குளிர்சாதன வசதி) – இருக்கை 

1, 2 மற்றும் 3ம் வகுப்புகள் (1 கி.மீ.-க்கு) – 2 பைசா உயர்வு