டெல்லி: நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் ரயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதை உறுதிபடுத்தி உள்ளார், ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா. கட்டண உயர்வு பரிசீலனையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
சென் ஐசிஎப்க்கு வந்த அமைச்சர் சோமன்னா, ஜூலை 1 முதல் ரயில் கட்டண உயர்வு பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.

நாடு முபவதும் பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை ஜூலை 1, 2025 முதல் உயர்த்துவதற்கு இந்தியன் ரயில்வே திட்டமிட்டு இருந்தது. ஏசி ரயில், சாதாரண ரயில் கட்டணம் என அனைத்திலும் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது. சாதாரண ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும் AC வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் 2 பைசா வரை உயரும் என்றும் தகவல்கள் வெளியாகின.
புறநகர் ரயில் பயணிகளுக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு 500 கிலோமீட்டர் வரையிலும் கட்டண உயர்வு இருக்காது என்றும் 500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு அரை பைசா மட்டுமே கட்டணம் உயரும் என்றும் கூறப்பட்டது. மாதந்திர சீசன் டிக்கெட்டுகளிலும் எந்த மாற்றமும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த சென்னை ஐசிஎஃப் ரயில்வே தொழிற்சாலையை பார்வையிட்ட ரயில்வே இணை அமைச்சர் சோமன்னா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
வந்தே பாரத், அமிர்த பாரத், கொல்கத்தா மெட்ரோ ரயில் பெட்டிகள் மற்றும் வரவிருக்கும் ஹைட்ரஜன் ரயில் பெட்டிகளின் உற்பத்தி முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையை (ICF) இன்று பார்வையிட்டேன். ICF-ல் நடந்து வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினேன், மேலும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் நல்ல உரையாடலை மேற்கொண்டேன்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், இந்திய ரயில்வே, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ரயில்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், சுயசார்பு நோக்கிய நமது பயணத்தை மறுவரையறை செய்வதன் மூலம், ஆத்மநிர்பர் பாரதத்தின் புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகிறது என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கட்டண உயர்வு குறித்த கேள்விகு பதில் கூறியவர், ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயில் பயணக் கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இத்திட்டத்திற்கான இறுதி முடிவை பிரதமரும் ரயில்வே அமைச்சகமும் இணைந்து எடுப்பார்கள் என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]