திருவாரூர்:

டன் சுமையால் தனது பேத்தியான 2சிறுமிகளை 20ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார், அந்த சிறுமிகளின் பாட்டி. இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 2 சிறுமிகள் இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில்தான் இதுபோல சிறுவர், சிறுமிகளை கொத்தடிமைகளாக விற்பனை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வரும். ஆனால், தற்போது தமிழகத்தில் 2 சிறுமிகள் 20ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் கவிதா மற்றும் சங்கீதா. தாய் தகப்பன் இல்லாத இந்த சிறுமிகள் இருவரையும் அவர்களது பாட்டி  இடைத்தரகர்கள் மூலம் ஈரோட்டை சேர்ந்த ஒருவருக்கு தலா ரூ.10ஆயிரத்துங்ககு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த  குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமிகளை விற்ற பாட்டி மற்றும் இடைத்தரகர்களை கைது செய்துள்ளனர். குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள்மீத வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், விற்பனை செய்யப்பட்ட 2 சிறுமிகளும்,  ஈரோடு பகுதியில் உள்ள ஒரு நிறுவனத் தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவரை மீட்க காவல்துறையினர் சென்றுள்ளதாக  திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.