கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக,  ஊட்டியின் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  மரம் முறிந்து விழுந்ததில், கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த  சிறுவன்  உயிரிந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக, திடீரென மரம் முறிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில், சிக்கி,  கேரளமாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஆதிதேவ்(15) பலியானார்.

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  மேலும், ஆற்றோரங்களில் யாரும் குளிக்கவோ, வேறு எந்த பணிக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளம் மாநிலம் கள்ளிக்கோட்டையில் இருந்து பெற்றோருடன் உதகைக்கு சுற்றுலா வந்த சிறுவன் ஆதிதேவ், பைன் ஃபாரஸ்ட் பகுதியை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, 7 ஆம் மைல் பகுதியில் பலத்த காற்று காரணமாக, திடீரென மரம் முறிந்து விழுந்தது. இதில், சிக்கிய சிறுவன் ஆதிதேவ் சம்பவ இடத்திலேயே பலியானார். கேரளத்தில் இருந்து பெற்றோருடன் உதைக்கு சுற்றுலா வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சுற்றுலா வந்த மக்களிடையே பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.