நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில், இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவி மீது அரசு பிரேக் பிடிக்காத அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி உயிரிழந்தார். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகப்பட்டினம் அருகே உள்ள தேவூர் பகுதியில், இன்று காலை கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற நர்சிங் மாணவி மீது , அந்த வழியாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின்போது, மாணவி மீது அரசு பேருந்துஏறி இறங்கியதில், மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த பகுதியில் மக்கள் கூடி, பேருந்தை தாக்க முயன்றனர். பேருந்து டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,  மாணவியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து பேருந்து டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விசாரணையில், அரசு பேருந்து பிரேக் பிடிக்காததே விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய பொதுமக்களில் சிலர், ஸ்டாலின் அரசு, மெட்ராசுக்கு நல்ல பஸ்களை விட்டுவிட்டு,  இங்கெல்லாம் ஒட்டை உடைசல் பேருந்துகளை இயக்குகிறது. அதனால்தான் இதுபோன்ற விபத்துக்குள்ஏற்படுகிறது என குற்றம் சாட்டி உள்ளனர். இதுபோன்ற ஓட்டை உடைசல் பேருந்துகளால் இன்னும் எத்தனைபேரின் உயிர் போகப்போகிறதோ என அச்சம் தெரிவித்துள்ளனர்.