சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை சென்னை மாநகர காவல்ஆணையர், சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அதன்படி, QR Code ஸ்கேன் செய்து, Paytm மூலம் அபராதம் வசூலிக்கப்படும்.
சென்னை போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 300 பேருக்கு கியூ ஆர் கோடு பொருந்திய கருவி வழங்கி அறிமுகப்படுத்தி , பேடிஎம் மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 2018க்கு பிறகு இ சலான் மூலம் அபரதாம் விதிக்கபட்டது. ஆனால் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் அபராத தொகை கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தபப்ட்டுள்ள pay tm QR code மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் கட்டுவதில் சிரமம் இருக்காது.
இன்றுதான் இந்த PayTM அபராதம் கட்டுவது அறிமுகப்ப்டுத்தியுள்ளேன். இதனை தொடர்ந்து சென்னை முழுவதும் இந்த முறை இதனை அறிமுகப்படுத்த உள்ளோம் தற்போது 300 PAY TM அட்டைகளை போக்குவரத்து காவலர்களுக்கு கொடுத்துள்ளோம் என்று கூறினார்.