சாலை விதிகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளங்கள் மூலம் புகார்

Must read

சென்னை:
சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து சமூகவலைதளம் மூலம் புகார் அளிக்கலாம் என்றும், இதுபோன்று அளிக்கப்படும் புகாரை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சாலையில் போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் மற்றும் வழக்கும் பதிவு செய்வது வழக்கம். மேலும் மக்கள் தொகை அதிகமாக இருக்கிற காரணத்தினால் ஏ.என்.பி.ஆர் போன்ற சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தியும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை வைத்து உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article