தை பூசத்தை முன்னிட்டு நாளை வடலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை முதல் தொடர் விடுமுறை என்பதால் அறுபடை வீடுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் வடலூரில் உள்ள இராமலிங்க சாமிகள் கோயிலில் நாளை (25-1-2024) காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை மறுநாள் (26-1-2024) அதிகாலை 5:30 மணி என ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. தவிர சித்தி வளாக திரு அறை தரிசனம் சனிக்கிழமை (27-1-2024) நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இதனால் ஜோதி தரிசனத்தைக் காண வரும் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வடலூரில் போக்குவரத்து மாற்றங்களை அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து வடலூர் வரும் பேருந்துகள் நான்கு சக்கர வாகனங்கள் ராகவேந்திரா_சிட்டி அருகில் நிறுத்தவும்.
கடலூர் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் ராசாக்குப்பம் பை பாஸ் அருகில் நிறுத்தவும்,
சிதம்பரம் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் கருங்குழி அருகில் நிறுத்தவும்,
விருத்தாசலம் மார்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் நான்கு சக்கர வாகனங்கள் TNCSC குடோன் அருகில் நிறுத்தவும் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த தற்காலிக வாகன நிறுத்தங்களில் இருந்து வடலூர் நான்கு முனை சந்திப்பு வரை பக்தர்களை அழைத்து வந்து விடுவதற்கும் மீண்டும் அழைத்து செல்வதற்கும் (PICK UP-DROP Shuttle Service) தனி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடலூர் நான்கு முனை சந்திப்பில் இருந்து விருத்தாசலம் சாலையில் அவசர ஊர்தி மற்றும் இருசக்கர வாகனங்கள் தவிர்த்து தனியார் வாகனங்கள் உட்பட அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.