சென்னை,
மூக ஆர்வலர் ‘டிராஃபிக்’ ராமசாமி உடல்நலமில்லாமல் சென்னையில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
83-வயதிலும், தமிழக அரசியல் கட்சியினருக்கு, குறிப்பாக ஆளுங்கட்சியினருக்கு சொப்பனமாக திகழ்ந்தவர் சமூக ஆர்வலர் ‘டிராஃபிக்’ ராமசாமி,
பல்வேறு பொதுநல வழக்குகளைத் தானே முன்வந்து தாக்கல் செய்து, பல்வேறு பொதுநல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்த  வழக்கு தொடர்பாக நேற்று  சென்னை உயர்நீதிமன்றம் வந்த ‘டிராஃபிக்’ ராமசாமி, நீதிமன்ற வளாகத்திலேயே திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.. நேற்று முழுவதும் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதய பகுதியில் ஏற்பட்ட சிறு பிரச்னை மற்றும் டென்சன் காரணமாக  ‘டிராஃபிக்’ ராமசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு காரணகர்த்தாவாக திகழ்ந்தவர் டிராபிக் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]