சென்னை: போக்குவரத்து நெரிசலில், கிளாம்பாக்கம் உள்பட ஜிஎஸ்டி சாலை சிக்கித்தவிக்கும் நிலையில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
சென்னையில் இருந்து சுமார் 30கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், அந்த பேருந்துகளை தேடி பிடித்து ஏற மக்கள் படாத பாடு படுகின்றனர். அதுபோல சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக பல இடங்களில் இருந்து நேரடி மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால்தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கோயம்பேடு சென்று, அங்கிருந்து மாநகர பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கிருந்து ஊருக்கு செல்கின்றனர். இதனால் பல மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது.
மேலும், சென்னையின் நகர்ப்பகுதிகயில் இருந்து அங்கு செல்ல நேரடி பேருந்துகள் இல்லாத நிலையில், ஏராளமானோர் சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்துக்கு வாடகை டாக்சி மற்றும் ஆட்டோக்களில் பல நூறு ரூபாய் செலவழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், சென்னை முதல் செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில், பேருந்துகள் மட்டுமின்றி, கார், ஆட்டோ, இரு சக்கர வாகடங்கள் அணிவகுத்து செல்வதால், கடுமையான போக்குவரத்து நெரில் காணப்படுகிறது.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை” தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா நேரில் சென்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையின் இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என விசாரித்ததுடன், அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார். அவரிடம் பொதுமக்கள் தங்களது அவதிகளை எடுத்துரைத்தனர். இதையடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.