சென்னை:

சென்னை அருகே உள்ள  திருவிடந்தையில்  ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுவதை  முன்னிட்டு , ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நாளை தொடங்குகிறது. பிரதமர் மோடி நாளை இதை தொடங்கி வைக்கிறார்.

ராணுவ கண்காட்சியை முன்னிட்டு சென்னை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை  காவல்துறை அறிவித்துள்ளது.

நாளை முதல்  ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஈசிஆர் சாலையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் வழியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சி நடைபெறும் திடலை ஒட்டிய திருவிடந்தை, வடநெம்மேளி, கோவளம் ஆகிய இடங்களிலும் போக்குவரத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.