சென்னை:

நாளை மே 5ந்தேதி வணிகர் தினம் தமிழகத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை தமிழகம் முழுவதும்  அனைத்துவிதமான கடைகளும் கடைக்கப்பட்டிருக்கும்.

ஆகவே, பொதுமக்கள் நாளைய தேவைக்குறிய பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

தமிழகத்தில், மே, 5 வணிகர் தினத்தை முன்னிட்டு, வணிகர்கள் அனைவரும், தங்களின் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளனர். இதனால், பால் முகவர்கள்  அன்றைய தினம், ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து 100 சதவீத பாலை கொள்முதல் செய்து அவற்றை இருப்பு வைத்து, வினியோகிப்பது இயலாத காரியம். அவர்களை நாளைய தேவைக்கு குறைந்த அளவிலான பாலைத்தான் கொள்முதல் செய்வார்கள்.   இதனால், அன்று, பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் நாளை கோயம்போடு போன்ற காய்கறி சந்தைகள் மூடப்படுகிறது. மேலும் அனைத்து ஓட்டல்களும் மூடப்படும். இதன் காரணமாக நாளை காய்கறிகள், உணவுப்பொருட்களும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

இதன் காரணமாக நாளைய தேவைகளை கருத்தில்கொண்டு, பொதுமக்கள் தங்களது குடும்பங்களுக்கு, குழந்தைகளுக்கு தேவையான பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை இன்றே வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டால் நாளைய தேவையை எளிதாக சமாளிக்கலாம்…