60பேர் அட்மிட்: கொரோனா மருத்துவமனை மற்றும் வார்டாக மாறியது வர்த்தக மையம்…

Must read

சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம், கொரோனா வார்டாக மாற்றப்பட்டது. இங்கு முதல்கட்டமாக 60 பேர் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சீறி வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் இரட்டிப்பாகி வருகிறது. இதனால் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பியதைத் தொடர்ந்து, வர்த்தக மையம் உள்பட பள்ளிகள், தனியார் திருமண மண்டபங்களை நோயாளிகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி,  சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை தற்காலிக மருத்துவமனை மற்றும் கொரோனா வார்டாக மாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு   600 படுக்கைகள் கொண்ட தனி பிரிவு தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு ஒரு அறை என்ற அடிப்படையில் சிறிய அளவிலான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது அங்கு முதல்கட்டமாக  60-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More articles

Latest article