சென்னை

திமுக எம் பி டி ஆர் பாலு காங்கிரஸ் மீது பாஜக புலனாய்வு அமைப்புகளை ஏவுவதற்கு கண்டனம்  தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

டி ஆர் பாலு இது குறித்து.

”காங்கிரஸ் கட்சி மீது அமலாக்கத்துறை சோதனையை ஏவிவிடுவது வெட்கித் தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயல். பா.ஜ.க. அரசு இனிமேலாவது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக சந்திக்கும் துணிச்சலை பெற வேண்டும்.

பா.ஜ.க.ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமலாக்கத்துறை-யை தனது கூட்டணி கட்சியாக சேர்த்துக்கொண்டு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது பா.ஜ.க. அரசு.

என்று கூறி உள்ளார்.