மாமல்லபுரம்
இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18 ஆம் தேதி உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel