ஆக்ரா,

லக பிரசித்தி பெற்ற தாஜ்மஹாலில் உள்ள  ஷாஜகான் – மும்தாஜ் கல்லறைக்கு செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை இந்திய  தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் எடுத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட வருரும்  சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 30ந்தேதி தாஜ்மஹாலை பார்வையிட சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதன் காரணமாக கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி சுற்றுப்பயணிகள்  5 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை கட்டுப்படுத்த,  தாஜ்மகாலில் உள்ளே இருக்கும் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் கல்லறைக்கு செல்ல பார்வையாளர்க ளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இது தற்காலிக பரீட்சார்த்த நடவடிக்கை என தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தடை இன்று முதல் (புத்தாண்டு ) அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.