மூணாறு:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளையொட்டி இடுக்கி அணையைக் காண இன்று  முதல் ஜன.31 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையைக் காண அனுமதிக்கப்பட்டுவர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி இன்று முதல் ஜனவரி 31 வரை அணையைக் காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 10 முதல் மாலை 5 மணி வரை அணையை ரசிக்கலாம்.

வாரந்திர பராமரிப்பு பணிகளுக்காக புதன் கிழமை மட்டும் பயணிகளுக்கு அனுமதி கிடையாது.