தேனி:

தேனி அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவாருர் மாவட்டம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 22 பேர் மூணார் சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து விட்டு போடிமெட்டு வழியாக இன்று அதிகாலை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனம் போடிமெட்டு மலைப் பகுதியில் 7வது கொண்டை ஊசி வளைவில் திடீரென ப்ரேக் செயலிழந்து பாறை மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

“தமிழகத்தில் கோடை விடுமுறையை துவங்கியதை அடுத்து பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு – குறிப்பா, மலைவாசஸ்தலங்களுக்கு – மக்கள்  சென்று வருகின்றனர். இதனால் மலைவாசஸ்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது.  இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.

அதே போல வாகனங்களில் ஏற்படும் பழுதுகளாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே சுற்றுலா செல்லும் முன், வாகனங்களை ஓட்டுநர்கள் முழுமையாக சோதனை செய்த பிறகு பயணத்தை துவங்கவேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.