மதுரை:

மிழகத்தில் ஊரகப்பகுதிளுக்கான உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ‘வாக்காளர் களின் காலில் விழ கூச்சப்படாதீங்கப்பா’ என்று அதிமுக நிர்வாககிள் கூட்டத்தில், தெர்மோகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜு அறிவுரை கூறி உள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி பதவிகளைப் பிடிக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதையடுத்து, அதிமுக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி கவுன்சிலர் தேர்தலில் இந்த முறை அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள், ‘கை’ காட்டும் நபர்களுக்கே மட்டுமே ‘சீட்’ கொடுப்பதற்கு அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால் அதிருப்திகளும் எழுந்துள்ள நிலையில், ஆங்காங்கே அமைச்சர்கள் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்ட அதிமுகவில் நிர்வாகிகள் மூன்று அணியாக பிரிந்து கிடப்பதால் ‘சீட்’ கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகளின் உள்ளடி வேலையில் இறங்கி உள்ளதாகவும், இதனால் அதிமுகவின் வெற்றிவாய்ப்பு குறையும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

மதுரை மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தலுக் கான அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும், கூச்சப்படாமல்  வாக்காளர்களின் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்க வேண்டும் என்றும்  அறிவுரை கூறினார்.

அமைச்சரின் பேச்சு, அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.