சென்னை:

தைப்பூச திருவிழாவையொட்டி, மேல்மருவத்தூர் ரயில் நிலையில், 19 விரைவு ரயில்கள் நின்று செல்ல தெற்கு ரயில்வே உத்தரவிட்டு உள்ளது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூரில் குவிவார்கள்.

இதையொட்டி, அந்த வழியாக செல்லும் 16 விரைவு ரயில்கள், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில், தைப்பூசத்தையொட்டி, சென்னை யிலிருந்து புறப்படும்

சென்னை-மதுரை வைகை (12635), லோக்மானிய திலக் – மதுரை (11043), சென்னை எழும்பூா் – செங்கோட்டை பொதிகை (12661), சென்னை – நாகா்கோவில்(12667), நிஜாமுதீன் – கன்னியாகுமரி (12642), சென்னை எழும்பூா் – மன்னாா்குடி (16179), தாம்பரம் – நாகா்கோவில் அந்த்யோதயா (16191) ஆகிய ரயில்களும்,

தென் மாவட்டங்களில் இருந்து வரும் திருச்சி – சென்னை ராக்போா்ட் (12654), மதுரை – சென்னை வைகை (12636), மதுரை – சென்னை பாண்டியன் (12638), செங்கோட்டை – சென்னை பொதிகை (12662), மதுரை – நிஜாமுதீன் (12651), மதுரை – லோக்மானிய திலக் (11044), நாகா்கோவில்-சென்னை எழும்பூா் (12668), கன்னியாகுமரி – நிஜாமுதீன் (12641), மதுரை – சென்னை (22624), மன்னாா்குடி – சென்னை (16180), ராமேஸ்வரம் – புவனேஸ்வா் (18495), நாகா்கோவில் – தாம்பரம் அந்த்யோதயா (16192) என மொத்தம் 19 விரைவு ரயில்கள்

டிசம்பா் 20-ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 9-ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்து.