திருவனந்தபுரம்: நாடு முழுவதும் வரும் 27-ந்தேதி முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்குஆதரவாக கேரளாவிலும் முழு அடைப்பு நடைபெறும் என ஆளுங்கட்சியான மாக்சிஸ்ட் அறிவித்து உள்ளது. கேரளாவில், மாஸ்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என பிடிவாதமாக தெரிவித்து உள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் வட மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் 300 நாட்களை கடந்து ஓராண்டை நெருங்கி உள்ளது.

இந்த நிலையில், வருகிற 27-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டக்குழுவினர் அறிவித்து உள்ளனர். மேலும் அரசை விமர்சிப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, சிறையில் அடைப்பது போன்ற செயல்களையும் மேற்கொண்டு வருகிறது. இந்த கோரிக்கைகளை உள்ளடக்கி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சி.பி.அய் எம் ஆகியவற்றின் அழைப்பை ஏற்று வரும் 27ஆம் நாள் பாரத் பந்த் நடைபெற உள்ளது.

இதற்கு மாநிலங்கள் தோறும் ஆதரவு திரட்டி வருகின்றனர். விவசாயிகளின் முழ அடைப்பு போராட்டத்துக்கு கு பல்வேறு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கேரளாவிலும் வருகிற 27-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது.

அதன்படி அன்றைய தினம், மத்திய அரசின் போக்கை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என்றும், போக்குவரத்து ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 100 அமைப்புகள் பங்கேற்க உள்ளன. அன்றைய தினம் ஆங்காங்கே ,ரயில், பஸ் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளது. கம்யூனிஸ்டு கட்சியின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டு கட்சி, முழு அடைப்பு நடைபெறும் என்று ஆதரவு தெரிவித்து உள்ளதால், அன்றைய தினம் கேரளாவில் முழுமையான பாரத் பந்த் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி விவசாய அமைப்புகள் சார்பில் 27ந்தேதி ‘பாரத் பந்த்’ அறிவிப்பு…