டிராய் அறிவித்துள்ள புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஒருநாள் கேபிள் டிவியின் ஒளிபரப்பு சேவையை நிறுத்தி தமிழக கேபிள் டிவி ஆப்பிரேட்டர்கள் சங்கத்தினர் ஆரப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

cable

அண்மையில் டிராய் எனப்படும் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153.40 கட்டணத்திற்கு தேர்வு செய்து கண்டு களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி புதிய கட்டணத் தொகை ரூ.130 எனவும் அதற்கான ஜிஎஸ்டி உடன் சேர்த்து 154 ரூபாய் செலத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண தொகைக்கு ஏற்றவாறு ஜனவரி 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை தேர்வு செய்துக் கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் வாடிக்கையாளர் தேர்வு செய்யும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது. இந்த புதிய கட்டண விதிமுறை பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் டிராய் கூறி இருந்தது.

இதற்கிடையே டிராயின் இந்த புதிய கட்டண விதிகளுக்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சாதாரணமாக அரசு வழங்கும் சேனல்களை ரூ.70க்கு ஒளிபரப்பு செய்கிறோம், அதில் வாடிக்கையாளர்களின் விருப்ப சேனல்களும் அடங்கும். ஆனால், டிராய் அறிவித்த புதிய விதியின் படி வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்ப சேனல்களை 500 ரூபாய் வரை செலுத்தி பார்க்க நேரிடும் என கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று ஒருநாள் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை நிறுத்தி தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று காலையில் முதல் தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

[youtube-feed feed=1]