சென்னை:
தமிழகத்தில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசி யஅமைச்ச்ர், இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் 399 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், இதனால் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3043 என்றும் தெரிவித்தார்.
இன்று பாதிக்கப்பட்டுள்ள 600 பேரில் 405 பேர் ஆண்கள், 195 பேர் பெண்கள்.
அத்துடன் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605 ஆக உயர்ந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் விகிதம் 26.7% ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 3 பேர் பலியான நிலையில், இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 13,980 பேருக்கு கொரோனா டெஸ் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு பெட்டி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel