ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,898 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 4,213 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் இன்று காலை 10 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,898 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 108 பேர் பலியாகி இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெற்று வருவோர்களின் எண்ணிக்கை 1,537 என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் அதிகபட்ச பாதிப்பாக 1,230 பேரும், ஜோத்பூரில் 873 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.