தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் அறியப்பட்டவர் டாப்ஸி.
2016-ம் ஆண்டு ‘பிங்க்’ இந்திப் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
தற்போது அன்னையர் தினத்துக்காக அளித்த பேட்டியில் தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார் டாப்ஸி.
என் வாழ்க்கையில் ஒருவர் இருக்கிறார். என் குடும்பத்துக்கு அது தெரியும்.நான் எதையும், யாரிடமிருந்து மறைக்க விரும்ப மாட்டேன். என் வாழ்க்கையில் ஒரு நபரின் இருப்பை ஏற்றுக்கொள்வதில் எனக்குப் பெருமை என கூறியுள்ளார் .
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பாட்மிண்டன் வீரர் மதியாஸ் போ தான் டாப்ஸியின் காதலர் என்று பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

[youtube-feed feed=1]