டெல்லி: நாடாளுமன்றத்தில் ரூ. 92,570 கோடி மோசடி தொடர்பாக கடன் வாங்கி ஏமாற்றிய மல்லையா- நிரவ்மோடி உள்பட 50 பேர் பட்டியலை   மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராத் வெளியிட்டார். இதில் முதலிடத்தில் வைரவியாபாரியான மெகுல் சோக்சி உள்ளார். அரசுக்குச் சொந்தமான வங்கிகளின் மொத்தச் செயல்படாத சொத்துக்கள் (NPAs) ₹ 8.9 லட்சம் கோடியாக உயர்ந்த பிறகு ₹ 3 லட்சம் கோடிக்கு மேல் குறைந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், உறுப்பினர்கள் வாராக்கடன் குறித்த எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை அமைச்சர்கள்,  மோசடி தொடர்பான தகவல்களையும் வெளியிட்டனர்.

இதுதொடர்பாக நிதித்துறை இணையமைச்சர் பகவத் கராத் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்  இந்தியாவில் உள்ள வங்கி கடன் வாங்கி ஏமாற்றியவர்களின் 50 பேரது பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களின்   கடன் ரூ.92,570 கோடி எனவும் தெரிவித்துள்ளது.

மெஹூல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் ரூ.7,848 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திரும்ப செலுத்தவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஈரா இன்ப்ரா நிறுவனம் ரூ.5,879 கோடியும், ரெய்கோ அக்ரோ ரூ.4,803 கோடியும் செலுத்தவில்லை.

கான்காஸ்ட் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் ரூ.4,596 கோடி கடனை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது.

மேலும்  “அமலாக்கத்துறை அளித்த தகவலின் படி,  2014ஆம் ஆண்டில் இருந்து விஜய் மல்லயா, நீரவ் மோடி, நிதன் ஜயந்திலால், சேடன் குமார், ஜயந்திலால் சந்திசாரா, திப்தி சேடன் சந்திசாரா, ஹித்தேஷ் குமார் ஆகியோர் கடனை திருப்பி செலுத்தவில்லை என தெரிவித்தார்.

இதேப்போல் ஏபிஜி ஷிப்யார்டு, புரோஸ்ட் இண்டர்நேஷனல், வின்சம் டைமண்ட்ஸ் மற்றும் ஜிவல்லரி நிறுவனங்களும் கடன் பெற்று விட்டு வேண்டும் என்றே திரும்ப செலுத்த வில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

ரோடோமேக் குளோபல், கோஸ்டல் புராஜக்ட்ஸ், ஜூம் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.