ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் – முதல் 5 இந்தியர்களின் பட்டியல்!

Must read


இந்திய அணியைப் பொறுத்தவரை, பேட்டிங் அதிரடிகளுக்கு எப்போதும் பஞ்சமில்லை. ஏனெனில், நீண்டகாலமாக, இந்திய அணியானது பேட்டிங் அணியாகவே இருந்து வந்தது மற்றும் தற்போதும் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியில், அதிவேக சதமடித்த டாப் 5 வீரர்கள் யார் என்ற ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், முதலிடம் பிடித்திருப்பவர் தற்போதைய கேப்டன் விராத் கோலி.
* கடந்த 2013ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் 52 பந்துகளில் சதமடித்தார்.
* கடந்த 2009ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில், 60 பந்துகளில் சதமடித்து இரண்டாமிடம் பிடித்துள்ளார் வீரேந்திர சேவாக்.
* கடந்த 2013ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் 61 பந்துகளில் சதமடித்தார் விராத் கோலி.
* கடந்த 1997ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 62 பந்துகளில் சதம் விளாசினார் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன்.
* இங்கிலாந்து அணிக்கெதிராக 64 பந்துகளில் சதமடித்து பட்டியலில் இறுதி இடம் பிடித்துள்ளார் யுவ்ராஜ்சிங்.

More articles

Latest article