டில்லி

இந்தியாவின் மாநிலங்களுக்கான புதிய கண்டுபிடிப்புக் குறியீடுகளை நிதி அயோக் வெளியிட்டுள்ளது.

நிதி அயோக் என்னும் திட்டக்குழு ஒவ்வொரு மாநிலங்களிலும் செய்யப்படும் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டறிந்து அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப குறியீடுகளை வழங்குகிறது.   இதில் அதிக கண்டுபிடிப்புக்களைச் செய்த மாநிலங்களுக்கு அதிக குறியீடுகள் கிடைத்து முதல் இடங்களைப் பிடிக்கின்றன.

 

இந்த வருடத்துக்கான இந்த குறியீடுகள் பட்டியலை நிதி அயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.   கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ள கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் இவை கணக்கிடப்பட்டுள்ளன

இதில் கர்நாடகா 35.65 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது   இரண்டாவதாக தமிழ்நாடு 32.98 புள்ளிகளுடனும் மகாராஷ்டிரா 29.93 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.   கடைசி மூன்று இடங்களில் சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

யூனியன் பிரதேசங்களில் டில்லி, சண்டிகர் மற்றும் கோவா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.