சமூகவலை தளங்களில் வதந்திகளுக்கு பஞ்சமே இருப்பதில்லை. கேள்வி கேட்கவோ சென்சார் செய்யவோ ஆளில்லாததால் இங்கு வதந்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன. 2016 ஆம் ஆண்டில் இணையத்தில் உலாவந்த டாப்-10 வதந்திகளை இந்த கட்டுரையில் காண்போம்.

1. உலகின் தலைசிறந்த பிரதமர் மோடி என்று யுனஸ்கோ நிறுவனம் அறிவித்ததாக மனசாட்சியற்ற ஒரு வதந்தியை மோடியின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பிவந்தனர். இது பலராலும் இன்றளவும் சமூகவ்லைதளங்களில் ப்கிரப்பட்டுவருகிறது
2. உலகின் ஆகச்சிறந்த தேசியகீதமாக இந்தியாவின் ஜனகனமன-வை யுனஸ்கோ தேர்ந்தெடுத்ததாக இன்னொரு வதந்தி பரப்பப்பட்டு இந்த விஷயம் பின்னர் யுனஸ்கோவுக்கே தெரிந்து அந்த செய்திக்கு அந்த அமைப்பின் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்
3. உலகின் சிறந்த கரன்சியாக இந்தியாவின் 2000 ரூபாய் நோட்டை யுனஸ்கோ நிறுவனம் அறிவித்ததாக ஒரு வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. பின்னர் இது வதந்தி என்று பிபிசி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.
4. கள்ள நோட்டுக்களை செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கும் விதத்தில் இந்தியாவின் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களில் ஜி.பி.எஸ் நானோ சிப்புகள் இருப்பதாக ஒரு வதந்தி கிளம்பி ரூபாய் நோட்டே அரிதாக கிடைக்கும் இந்தக் காலத்தில் ஆர்வக்கோளாரில் பலர் ரூபாய் நோட்டை கிழித்துப் பார்த்து ஏமாந்தனர்.
5. புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் ரேடியோ ஆக்டிவ் லிங்க்குகள் இருப்பதாக சிலர் வதந்தி கிளப்பினர்.
6. உங்கள் வாட்சப் புரஃபைல் பிக்சரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தக்கூடும் என்று வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைவர் எச்சரித்ததாக ஒரு செய்தி சமூகவலைதளங்களில் சில நாட்களுக்கு முன் உலவியது
7. ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை செல்லாது என்று அறிவித்ததாக ஒரு தகவல் உலவிவந்தது. பின்னர் இச்செய்தியை ரிசர்வ் வங்கி வதந்தி என்று சொல்லி மறுத்தது.
8. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இளவயது தோற்றமுள்ள ஒரு பெண்ணின் புகைப்படம் இணையதளத்தில் பரபரப்பாக சுற்றிக்கொண்டிருந்து. இது ஜெயலலிதாவின் மகள் இவரை அமெரிக்காவில் இரகசியமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைத்துப் பாதுகாக்கிறார். பின்னர் அந்த பெண் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற உண்மையை பிரபல பாடகி சின்மயி போட்டு உடைத்தார்.
9. இந்தியாவில் உப்புத்தட்டுப்பாடு என்பது லேட்டஸ்ட் வதந்தி. மூன்றுபக்கம் சுற்றிலும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடான இந்தியாவுக்கு உப்பு தட்டுப்பாடு எப்படி வரும் என்பதைக்கூட யோசிக்காத படித்தவர்கள் கூட இந்த செய்தியை சமூகவ்லைதளங்களில் பகிர்ந்துகொண்டு வந்தார்கள்
10. பிரதம நரேந்திர மோடிக்கு ஆதரவு கேட்டு பிபிசி இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்க் டுல்லி என்பவர் நேருவின் அரசு ஆலமரம் போல நின்று நாட்டின் வளர்ச்சியை தடுத்து வந்ததாக ஒரு வதந்தி பரப்பட்டது.
 
UNESCO and RBI had to step in and clarify that many rumours which were spread in 2016 hold no truth at all. Find out the ‘fake news’, we almost believed in 2016.