டில்லி:
நாளை துணைஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதியஜனதா சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில், காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் பாரதியஜனதா வேட்பாளரான வெங்கையாநாயுடுவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த துணைபிரதமராக வெங்கையாநாயுடு தேர்வாகிறார்.
தற்போதைய துணை ஜனாதிபதி முகம்மது ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10ந்தேதி யுடன் முடிவடைய இருப்பதால், புதிய துணைஜனாதிபதிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
துணை ஜனாதிபதியை பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள்.
தற்போது, மக்களவையில் 543 எம்.பி.க்களும் 2 நியமன எம்.பி.க்களும் உள்ளனர். மாநிலங்களவை யில் 233 எம்.பி.க்களும் 12 நியமன எம்.பி.க்களும் உள்ளனர்.
துணை ஜனாதிபதி தேர்தலிலி நியமன எம்.பி.க்களுக்கும் ஓட்டுரிமை உண்டு. அவர்களும் வாக்களிக்கலாம்.
நாளை நடைபெற இருக்கும் துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் உள்ள 790 எம்.பி.க்களும் வாக்களிப்பார்கள். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தனி அறையில் இதற்காக ஓட்டுச்சாவடி ஏற்படுத்தப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எம்.பி.க்கள் அனைவரும் ரகசிய முறையில் ஓட்டுச் சீட்டை பயன்படுத்தி வாக்களிப்பார்கள். எம்.பி.க்கள் ஓட்டு போடுவதற்காக சிறப்பு பேனா பயன்படுத்தப்படும்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதைத் தொடர்ந்து உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படும். இதன் காரணமாக ஓரிரு மணி நேரத்துக்குள் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற தெரிந்து விடும்.
எம்.பிக்கள் விரம்
பாராளுமன்ற மொத்த எம்.பி.க்களான 790 பேர்.
பாரதியஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் 550 பேர்
மீதி உள்ள 240 எம்.பிக்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள்.
இதன் காரணமாக வெங்கையா நாயுடுவே அடுத்த துணை ஜனாதிபதியாகவே தேர்வு செய்யப்படு வார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அவரது வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது.