சென்னை
சென்னை மெட்ரோ ரயில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது.

உலகெங்கும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதாவது காலை 8 முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 முதல் 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 முதல் 8 மணி மற்றும் பகல் 11 முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும் இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel