வர்ஜீனியா :
அமெரிக்காவின் வர்ஜினியா மாவட்டத்தில் உள்ள குரு சச்சிதானந்தாவின் ஆசிரமத்தில் ரஜினி ஓய்வெடுப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ரஜினி கபாலி படத்தை முடித்துவிட்டு கடந்த மே மாதம் தனது மகளுடன் அமெரிக்கா சென்றுவிட்டார். ரஜினி ஓய்வெடுக்க சென்றதாக அவரது குடும்பத்தினர் கூறினார். ஆனால், ரஜினி உடல் முழு பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும், தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும், கபாலி படம் வெளியீட்டிற்கு முன்பாக சென்னை திரும்புவார் என அவரது சகோதரர் சத்திய நாராயணா தெரிவித்திருந்தார்.
ஆனால் ரஜினி இன்னும் சென்னை திரும்பவில்லை. தற்போது ஆகஸ்டு மாதம் முதல் வாரம் சென்னைத் திரும்புவதாக செய்திகள் வருகின்றன.
கபாலி பட வெளீயிட்டிற்கு முன்பு ரஜினி சென்னை திரும்புவார் என அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர் வரவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது.
இதற்கிடையில் ரஜினி, அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள குரு சச்சிதானந்த சுவாமிகளின் லோட்டஸ் ஆசிரமத்தில் சாமி குடும்பிடுவது போல புகைப் படங்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரஜினி அமெரிக்க ஆசிரமத்தில் ஓய்வெடுப்பதாக தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel