டில்லி:
முத்தலாக் முறைக்கு எதிரான வழக்கில் நாளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறவுள்ளது.
இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய 3 முறை தலாக் கூறும் முத்தலாக் முறை நடைமுறையில் உள்ளது.
இது தொடர்பான வழக்கில் முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த தீர்ப்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நாளை இதில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.