சென்னை

ரசு எச்சரிக்கையை மீறி நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான  ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  இது தொடர்பாக ஏற்கனவே  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2 ஆண்டு களாக போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு மறுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 4ந்தேதி மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மதுரைஉயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரிக்க நீதிமன்றம், போராட்டத்தை ஒத்திவைக்க நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறியது. அதைத் தொடர்ந்து அரசுக்கும் பல்வேறு கேள்வி எழுப்பி பதில் அளிக்குமாறு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து, அரசு எந்தவித பதிலும் தெரிவிக்காத நிலையில், நாளை முதல் மீண்டும் போராட்டத்தில் குதிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.

இதை எதிர்த்து  சென்ன உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.