மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 19வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். அதுபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திலும் நாளை நினைவேந்தல் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு வருகை தரும் தலைவர்களையும், தொண்டர்களையும் வருக வருக என வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் மாநில துணைத்தலைவர் இராம சுகந்தன், அகில இந்திய கிராம தொழிலாளர் சம்மேளன நிர்வாகி இராம கர்ணன் ஆகியோர் வரவேற்கின்றனர்.
இதுகுறித்து வாழப்பாடி ராமசுகந்தன் மற்றும் இரா கர்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொண்டர்களின் அன்புத்தலைவரும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை உயரித்ப்பித்து காட்டிய உத்தமத் தலைவரான வாழப்பாடியாரின் 19வது நினைவு தினம் நாளை (27-10-2021) சிறப்பிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராஜீவ் வன் வளாகத்தில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலையணிவித்து நினைவுநாள் விழாவை சிறப்பிக்க உள்ளனர்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், தோழர்கள் ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ராஜீவ் பவன் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்து அவரது நினைவைப் போற்ற அன்புடன் அழைக்கிறோம்.
அதுபோல, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள வாழப்படியார் நினைவிடத்தில் சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தலைவர்கள், தொண்டர்கள் வருகை தந்து வாழப்பாடியாரின் அவரது நினைவைப் போற்ற அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.