அரசியல்வாதி ஒருவரை பற்றி நாளை பகீர் தகவலை வெளியிப்போகிறாராம் சு. சாமி!

Must read

டெல்லி:

நாளை அரசியல்வாதி ஒருவர் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிடப்போவதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர்  சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது அரசியல் அரங்கில்  பரபரப்பை கிளப்பியுள்ளது.

டிவிட்டரில் இன்று சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள தகவல் ஒன்று அரசியல்வாதிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.  அதில், “ நான் நாளை ஒரு விஷயத்தை வெளியே சொல்ல உள்ளேன். அது ஒரு அரசியல்வாதியாக இருக்க கூடும். அவர் மீதான விசாரணைக்கு பின்னர் மேலும் ஒருவரை கையில் எடுக்க உள்ளேன்” என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதற்கு டிவிட்டரிலேயே பலரும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். அது காங்கிரசை சேர்ந்தவரா அல்லது அதிமுகவை சேர்ந்தவரா அல்லது திமுகவை சேர்ந்தவரா என்று அவரிடம் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அதற்கு அவர் பதில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி மீடியாக்களை தன் பக்கம் திருப்பிவிடுவது சுப்பிரமணிய சுவாமியின் பழக்கம்தான். என்றாலும் அவர் யாரை சொல்லப்போகிறார் என்பதை நாளை வரை பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

 

More articles

Latest article