டெல்லி
நாளை ஞானேஷ்குமார் புதிய தலமை தேர்தல ஆணையராக பதவி ஏற்கிறார்.

இன்றுடன் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒய்வு பெறுவதால், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்யப்பட்டுள்ளார் முன்பு தேர்தல் ஆணையர்கள் நியமனம் பொறுத்தவரை பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார்..
மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி, பிரதமர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும். இந்த தேடுதல் குழுவில் ஒரு மத்திய அமைச்சர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவர். பிரதமர் தலைமையிலான இந்த குழுவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்குப் பிறகு இரண்டு தேர்தல் ஆணையர்களில் மூத்தவரான ஞானேஷ் குமார், அவருக்குப் பிறகு பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்தாண்டு பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், 2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்கள், 2027-ல் நடைபெற உள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நாளை ( பிப்.19-ம் தேதி) பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது