சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாரை தரிச்சிக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் பிள்ளையார் சிலைகளை வைக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கிலும், பெரிய கோவில்களில் தடை விதிக்கப்படுவதாகவும், சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கொரோனா நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படுவதாகவும் தமிழகஅரசு தெரிவித்தது.
இந்த நிலையில், திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் வழிபட தடை விதித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.