ரோடு

நாளை ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 ஆம்ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மறைவுக்குப் பிறகு 2023 ஆம்ம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை ஆளும் தி.மு.க. களம் காண்கிறது.  இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க, பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி போட்டியிடுகிறார்.

நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை தி.மு.க. நேற்று முன் தினம் தொடங்கி உள்ளதால் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தனர். நேற்று இரண்டாவது நாளாக தி.மு.க. வினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம்,

“ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் 4 வார்டுகளில் நாங்கள் வாக்கு கேட்டு முடித்துள்ளோம். அங்கு தி.மு.க.வுக்கு அனைத்து மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். நாளை (17 ஆம்  தேதி) பகல் 12 மணிக்கு தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்வார்”

என்று தெரிவித்துள்ளார்.