சென்னை
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது.
ஏப்ரல் 6 அம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு அணிகள் களத்தில் இறங்கியுள்ளன. இதில் திமுக அணியில் தொகுதி பங்கீடுகள் முடிந்துள்ளன. இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.,
தவிர முஸ்லிம் லீக் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மொத்தம் 60 தொகுதிகள் ஆகும்.
இந்த தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களிடம் தொடர்ந்து நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.