சென்னை

நாளை கொரோனா தடுப்புப் பணி குறித்து சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இன்று தமிழகத்தில் இன்று 30,355 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 14,68,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 16,471 பேர் உயிர் இழந்து 12,79,658 பேர் குணம் அடைந்து தற்போது 1,72,735 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  எனவே கொரோனா தடுப்புப் பணி குறித்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூட்ட உள்ளார்.  இதற்குச் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில் அடுத்த 2 வாரத்தில் கொரோனா பரவல் என்பது உச்சத்தில் இருக்கும் நிலையில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல தடுப்பூசி விநியோகம் தொடர்பான பல்வேறு விசயங்கள் குறித்து மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.