சென்னை: சென்னையில் நாளை ஒருநாள் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 10ந்தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஞாயிறு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை வழக்ம்போல அனைத்து தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பேருந்துகளும் 24 மணி நேரம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் சேவையும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.