பழனி

நாளை பழனிமலை அடிவாரத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

ஏராளமான பக்தர்கள் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் விடுமுறை, பண்டிகை மற்றும் திருவிழா காலங்கள் என்றால் லட்சக்கணக்கானோர் பழனிக்கு திரண்டு வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.  எனவே பழனி அடிவாரம், கிரிவீதிகளில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.

பழனிமலை அடிவாரத்தில் ஏராளமாக ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. பக்தர்கள் இந்த கடைகளால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதால்  இந்த கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

எனவே பழனி முருகன் கோவில் மலையடிவாரம் பகுதியில் வர்த்தகர்கள் சங்கம் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்கள்  மலை அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.