சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாளை (ஆகஸ்டு23ந்தேதி ) தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, 7வது கட்ட பொதுமுடக்கம் தளர்வுகளுடன் ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், ஆகஸ்டு மாதத்தில் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகள் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதன்படி, நாளை (ஆகஸ்டு 23ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த ஊரடங்கின்போது, பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவ மனை வாகனங்கள், அவசர ஊர்திகள் மட்டும் அனுமதிக்கப்படும். வேறு எந்த சேவைகளும் கிடையாது.