சென்னை
சென்னையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே சென்னையில் தற்போது தக்காளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த 3 தினங்களாக கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.40 வரை அதிகரித்து விற்பனையாகி வருகிறது.
நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. எனவே வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி விலை தொடர்ந்து விலை அதிகரிக்கும் பட்சத்தில், ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படக்கூடிய சில குறிப்பிட்ட ரக ஆப்பிள் விலையுடன் போட்டி போடும் அளவுக்கு அதன் தக்காளியின் விலையும் உயரலாம் என வர்த்தகர்கள் சொல்கின்றனர்.