டில்லி,
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டண வசூல் நேற்று  நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கி உள்ளது.
கடந்த 8ந் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் சில்லரை பிரச்சினையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2ந் தேதி வரை கட்டண,ம் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய அமைச்சர் அறிவித்திருந்தார். 2ந்தேதி நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து கட்டணம் வசூலி தொடங்கியது.
tollgate
இதையடுத்து நேற்று  நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கக் கட்டணத்திற்காக வாகன ஓட்டிகள் அனைவரும் 2000 ரூபாய் நோட்டுகளையே தருவதால் போதிய சில்லரை தர முடியாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 3800 சுங்கச்சாவடிகளிலும் ஸ்வைப் மெஷின் ரெடியாக வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இன்னும்  ஸ்வைப் செய்யும் வசதி செயல்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது.
சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலிப்பு மீண்டும் துவங்கியுள்ளதால் லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டும் என லாரி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை நீடிக்க வேண்டும் என அவர்களும் வலியுறுத்தினர். மேலும் இம்மாத இறுதி வரை காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.